Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை குறித்த அமரிக்கப் பிரேரணை 21ம் திகதி சமர்ப்பிக்கப்படுகின்றது

untamilsஇரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக குறித்த அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது..
பிரேரணை குறித்த விவாதத்தின் போது பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா கியூபா போன்ற நாடுகள் அமரிக்கத் தலையீடு குறித்து எதிர்ப்பு வெளியிட்டன. மனித உரிமை ஆணையகத்தில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் உறுப்பு நாடுகள் அல்ல. இந்த நாடுகள் உறுப்பு நாடுகளோ அன்றி சோசலிச நாடுகளோ இல்லை. இந்த நாடுகள் வெறுமனே கருத்துத் தெரிவிக்கும் உரிமையைப் பெற்றுள்ள போதும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. அமரிக்க சார்பு தமிழ் ஊடகங்கள் சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன.
அமரிக்காவின் இலங்கை குறித்த பிரேரணை இலங்கக்கு எதிரன உலக மக்களின் எதிர்புணர்வு இன்றி ராஜபக்சவின் அதே பேரினவாத அரசியலைத் தொடர்வதற்கான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

Exit mobile version