Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை கடற்படை, மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கி,வலைகள் அறுப்பு!

 
இலங்கை கடற்படை, மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கி, வலை களை அறுத்தெறிந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், சனிக்கிழமை யன்று கடலுக்குச் சென்றனர். நள்ளி ரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பைபர் படகுகளில் சூழ்ந்து கொண்ட இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அசிங்கமாகத் திட்டிக் கொண்டே வெறித்தனமாக வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். அத்துடன் மீனவர்களை அங்கு மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித் துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மீனவர்கள் ஞாயிறன்று வெறும்கையுடன் இரா மேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினரிடம் புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில், இது தொடர்பாக புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இலங்கை கடற்படையினரால் தமி ழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வரும் நிலையில், இப்பிரச்ச னையில் மத்திய அரசும்- தமிழக அர சும் பொறுப்பான முறையில் தலை யிட்டு, தமிழக மீனவர்களைப் பாது காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பின ரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீனவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனினும் இப்பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தாமலேயே உள்ளன.

தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக, அண்மையில், தமிழக ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அடுத்த கட்டமாக நாளை (பிப்ரவரி 2)ஆளுநர் மாளிகையை முற்றுகை யிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

Exit mobile version