Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி:இந்திய கடற்படை கப்பல் திருமலை வருகை!

 இலங்கை  கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் INS Magar எனும் போர்க் கப்பல் நாளை திருகோணமலைத் துறைமுகத்துக்கு செல்லவுள்ளது.

இப்பயிற்சி நடவடிக்கையில்  இலங்கைக் கடற்படையின் போர்க் கப்பலும்  இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டு இப் போர்க் கப்பல் இந்தியாவின் கிழக்குப் பகுதியான விசாகப்பட்டினத்தில் இருந்து திருகோணமலைக்குச் செல்கின்றது.

140 கடற்படையினரைக் கொண்ட இந்தப் போர்க் கப்பல் காலாற்படையின் போர் வாகனங்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள் மற்றும் 500 படையினரை ஏற்றிச் சென்ற தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதுடன், ஒரு உலுங்கு வானூர்தியை  தரையிறக்கும் வசதியையும் கொண்டது.

இந்தப் போர்க் கப்பல் திருகோணமலையில் தரித்தும் நிற்கும் காலப்பகுதியில்   இலங்கை கடற்படையின் Special Boat Squadron  கொமாண்டோக்கள் இந்தியக் கடற்படையினருக்கு சாகசங்களையும் செய்து காண்பிக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Exit mobile version