சுமார் 10.30 மணி அளவில் மண்டபம் பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்.
எனினும் கடந்த 15ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சாந்த மூர்த்தி, அழகேசன், தர்மலிங்கம், பெரியசாமி ஆகிய 4 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்றும் அவர்களின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு புறத்தில் தமிழகப் பெரு முதலாளிகளின் பாரிய மின்பிடி முறைகளுள் சிக்கியுள்ள தொழிலாளர் மறுபுறத்தில் இலங்கை மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்குச் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளனர். இந்த முரண்பாட்டைப் புரிந்துகொண்டுள்ள இலங்கை அரசும் அதன் துணைக் குழுக்களும் தமிழ் தேசிய விரோதக் குழுக்களும் அதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவற்றின் இடையே பாதிப்பிற்கு உள்ளாவது இலங்கை இந்திய ஏழைத் தமிழ் மீனவர்களே.