Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை கடற்படைத் தாக்கி தமிழக மீனவர் கொலை.

எதுவும் நடக்கப் போவதில்லை. அநேகமாக இவர் நானூறாவது மீனவராக இருக்கலாம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் வேர் விட்ட எண்பதுகளில் தொடங்கிய படுகொலை 2009-ல் மே மாதம் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 400 மீனவர்கள் இதுவரை சிங்களக் கடற்படைகளால் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய, மாநில அரசுகளோ இதுவரை இந்த மீனவர் படுகொலைகளைக் கண்டு கொள்ளவில்லை. பெரியாருக்குப் பின்னர் திராவிட இயக்கம் பார்ப்பனரல்லா முற்பட்ட சாதிகள், பிற்படுத்தபப்ட்ட ஆதிக்க சாதிகளின் அதிகார பீடமாக மாறிப்போன பிறகு இதே அளவில் கொலைகள் இன்னொரு ஆதிக்க சாதியில் விழுந்திருந்தால் இந்நேரம் திராவிட இயக்கங்கள் கொதித்தெழுந்திருப்பார்கள். சமூக அடுக்குகளில் ஒடுக்கப்பட்ட ஓரங்களில் வாழும் மீனவ மக்கள் படுகொலைகளை திராவிட இயக்கம் கண்டு கொள்ளவே இல்லை. கண் துடைப்புக்கு ஒரு அறிக்கை, கோஷங்கள் என்கிற அளவில் மட்டும் நாடகங்களை அரங்கேற்றி விட்டுச் செல்கிறார்கள். இதுதான் தமிழக மீனவர் படுகொலைகளில் திராவிட இயக்கங்களின் அணுகுமுறை. இந்நிலையில் வேதாரண்யம்

அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்றிரவு ஆறுக்காட்டுத்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளில் ஏறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் செல்லப்பன் என்ற மீனவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் நள்ளிரவில் கரை திரும்பினர். செல்லப்பன் இறந்த சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version