இலங்கை சிங்களஇ பெளத்த நாடாக இருந்தாலும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை தடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் பிரிவினைகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரே வழிமுறை தேசிய கீதம் மட்டுமே. ஒரு விழாவில் ஒரே சந்தர்ப்பத்தில் இரு மொழிகளில் தேசிய கீதத்தினை இசைக்க முடியாது. ஆனால் மொழி பெயர்ப்பு செயற்றிட்டங்களை உபயோகிக்க முடியும். சிங்களத்தல் தேசிய கீதத்தினை இசைப்பதில் தமிழ் மக்களுக்கு சிக்கல்தான் இருக்கின்றது என்றார்.
அதனால் தான் தமிழிலில் பாடுகின்றனர். தேசிய கீதத்தினை எந்த மொழியில் பாடினாலும் அது ஒரே அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்றது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இலங்கை சிங்கள பெளத்த நாடென்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பெளத்த கலாசாரங்களுக்கும் மதவிடயங்களுக்கும் முன்னுரிமை இருக்கின்றது. ஆனால் ஏனைய மதங்களும் இனத்தவர்களும் அடக்கப்பட வேண்டுமென எவரும் குறிப்பிடமுடியாது என்றார்.