அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் அதில் இலங்கையை கவலை தருகின்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், நிலைமை இன்னமும் மிகவும் மோசமானதாகவே இருப்பதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
மோசமான மனித உரிமை நிலவரங்களை பலவீனமான பொலிஸ் மற்றும் நீதித்துறை மேலும் மோசமாக்கியது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மனித உரிமை நிலவரங்களை கண்காணிப்பதற்காக செயற்படுகின்ற இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ சுதந்திரமானது அல்ல என்றும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் கலாச்சாரத்தை கையாள அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் விடயத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் முறைகேடுகளை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
BBC.