Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஐ.நாவை மிரட்டுகிறது “பன்”னின் ஐ.நா சாட்டுச் சொல்கிறது, காந்தீயம் என்கிறது : இன்ன சிட்டி பிரஸ்

இன்ன சிட்டி பிரஸ் இலங்கையில்  ஐ.நாவின் இரட்டை நிலைப்பாடு குறித்ட்கு கேள்வியெழுப்பியுள்ளது.

போர்க்குறங்களுக்கான விசாரணை நிறுத்தப்படும்வரை ஐக்கிய நாடுகள் பணியாளர்களை பணயமாக வைத்திருக்குமாறு இலங்கை வீடமைப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்த போதும், அதனைக் கண்டிக்க மறுக்கும் ஐ.நா சாட்டுக்களைக் கூறிவருகிறது. இன்னசிற்டி பிரஸ் அமைச்சரின் இந்த நடவடிக்கை குறித்து ஐ.நாவைக் கேள்வியெழுப்பிய போது, அதனைக் கண்டிப்பதற்குப் பதிலாக சாட்டுக்களை கூறியது. இன்னசிட்டி பிரஸ் ஐ.நா துணைப்பேச்சாளரான fபார்கான் ஹக், அமைச்சரின் கருத்து (ஊடகங்களால்) சரியாக மேற்கோள் காட்டப்படாமல் இருந்திருக்கலாம் என்றார். (ஒளிப்படம் here)
பின்னதாக ராஜபக்ச அரசு விமல் வீரவன்சவின் கருத்து அவரது தனிப்ப்பட்ட கருத்து அது என உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சூடானிலோ வேறெந்த நாட்டிலோ இவ்வித கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து கண்டனம் தெவிப்பது போல இலங்கை விடயத்தில் கண்டிக்காமல், அமைச்சர் பேசியதை ஊடகங்கள் தவறாக பிரசுரித்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் இணை பேச்சாளர் பர்ஹான் ஹக் காரணம் கற்பித்திருக்கிறார் என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்னால் எவராவது கூடுவது குறித்து அங்கிருந்து அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஹக் தெரிவித்தார். யார் அறிக்கை அனுப்புவது? கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பு அதிகாரி நீல் பூனேதானே?
ஆனால், அவர்தான் கடந்த வருடம் இலங்கையில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் திட்ட பணியாளர்களை அரசாங்கம் சிறையில் அடைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய போது மௌனம் சாதித்துக் கொண்டிருந்தவர் என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் பின்னர், கடந்த புதன்கிழமை இலங்கையின் பயறுத்தல் குறித்து மிகவும் சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரிடம் இன்னர் சிற்றி பிறெஸ் கேட்டபோது, அவர் அதற்கு பதிலளிக்கையில், அமைச்சர் வீரவன்ஸவின் கோரிக்கை உண்மையில் காந்திய சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை போன்றது என்று அவர் அதனை நியாயப்படுத்தினார். அது வன்முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார். அப்படியானால் இலங்கை அரசாங்கம் பாராட்டப்பட வேண்டியதே, என்று இன்னசிட்டி பிரஸ் கேள்விவெழுப்பியுள்ளது.
விசாரணைக் குழு பணியாற்ற வேண்டிய விதிமுறைகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படுமா என்று பிறெஸ் கேட்டபோது, அது வெளியிடப்பட மாட்டாது என்று ஹக் பதிலளித்தார். இது ஒரு ஆலோசனைக் குழு என்றும் அதன் ஆலோசக செயற்பாட்டுக்கு அப்பால் செயல்படும் அமைப்பு அல்ல என்றும் அவர் கூறினார். மேலும் ஒரு புதுத் தகவலையும் ஹக் வெளியிட்டார். அதாவது, விசாரணைக்குழு எழுத்துமூலமான அறிக்கை ஒன்றை முடிவில் தயாரிக்காமல் இருக்கவும் கூடும் என்றும் அவர் கூறினார்.(ஒளிப்படம்here)

Exit mobile version