Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை உற்பத்திகளுக்குத் தடை : Save Tamil அமைப்பின் போராட்டம்

savetamilஇலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் – Save Tamil’ அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.

ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரசின் தலைவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

இலங்கப் பொருட்களை தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயலில் இறங்குங்கள். ஆயிரக்கணக்கானோர் ஆதரவளித்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இந்த புறக்கணிப்பில் எங்களோடு சேர்ந்து ஒன்றுபடுவதன் மூலம், அனைத்துத் தடைகளையும் மீறி வெல்வோம்.

மேற்கண்டவாறு `சேவ் தமிழ்’ அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version