Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவ உயரதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதுவர் பதவிகள்.

 

இலங்கை இராணுவ உயரதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதுவர் பதவிகளை வழங்கும் நடவடிக்கையை அதிபர் ராஜபக்ச அரசு துரிதப்படுத்தியுள்ளது.

இதன் முதற்கட்டமாக 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ெர்மனிக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரதித் தூதுவர் பதவியை பொறுப்பேற்பதற்காக 57 ஆவது படையணியின் தளபதி பதவியில் இருந்து அவர் விலகியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொழும்பில் இருந்து ஜெர்மனிக்கு சென்றிருப்பதாக அரசாங்க தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் 57 ஆவது படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன் , இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாவாகவும் இவர் விளங்கினார்.

இதேவேளையில் மலேசியாவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் பதவி வகித்திருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதித் தூதுவர் பதவியை பொறுப்பேற்பதற்காக இவரும் மலேசியாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version