Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் பயணத் தடை?

european_unionஇலங்கையின் இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவதற்கு தடை விதிக்கும் பிரேரணையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைமைச் செயலகங்களில் இது குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவால் முன்மொழியப்பட்ட இந்தப் பிரேரணை பொதுநலவாய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஜக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இது பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் காங்கிரசிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், அமெரிக்கா இந்தப் பயணத்தடையை வரவேற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்படுமாயின், யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்தும்வரை இலங்கை இராணுவத்தினருக்கான பயணத் தடை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version