ஒவ்வொரு காலையும் விடியும்போதும் பச்சிழம் குழந்தையாகவிருந்த தனது மகளிடம் இன்று தான் நிரந்தரமாக்கபட்டுவிடுவேன் என நம்பிக்கையுடனேயே கூறிப்புறப்படுவாரம் ஒரு தொழிலாளி. தற்காலிகத் தொழிலாளராகவே வேலைபார்த்து மகள் பல்கலைக் கழக அனுமதி பெறுவதற்காகக் காத்திருந்தார். பல்கலைக் கழக அனுமதி கிடைத்தும் அங்கு மகள் செல்லமுடியாத அளவிற்கு வறுமை தலைவிரித்தாடுகிறது. தொழிலாலியின் கனவுகள் கரைந்து போக ஓய்வூதியம் கூட இல்லாத நோயாளித் தந்தையைப் பாதுகாக்க மகள் புடவைக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான இத்தகவலிற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு.
தமது பணியை நிரந்ரமாக்குமாறு கடந்த 17ம் திகதியிலிருந்து போராட்டம் நடத்தும் தொழிலாலர்களின் போராட்டம் நிறுவனத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பரவியது. சுவிட்சர்லாந்து முதலாளிகள் தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையக் கட்டவிழ்த்துவிட்டனர். அதற்கு இலங்கை இனப்படுகொலை இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
இதனைத் தொடந்து உள்ளக தொழிலாளர் சங்கம்-Inter Company Employees Union (ICEU)- இராணுவத்தைக் கண்டித்து அறிக்கைவிடுத்தது. இதனை மறுத்த இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தாம் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வழமைபோல மறுப்புத் தெரிவித்தார்.
ஹோலிசிம் சார்பாக 6000 ஒபந்தக்காரர்கள், அக்குராகொட என்ற இடத்தில் அமைக்கப்படும் இராணுவத் தலைமையகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாவிட்டால் 6000 தொழிலாளர்களும் வேலையிழக்க நேரிடும் என வணிகசூரிய மிரட்டினார்.
உலகின் பல்தேசிய நிறுனனங்களின் நெருங்கிய நண்பர்களான ராஜபக்சவும் மோடிகளும் 21ம் நூற்றாண்டின் அடிமைகளை தெற்காசியாவில் உருவாக்கும் நோக்கோடு பல்தேசிய நிறுவனங்களால் நியமிக்கப்பட்டவர்கள்.
உலகின் பல்தேசிய நிறுனனங்களின் நெருங்கிய நண்பர்களான ராஜபக்ச மோடி போன்றோர் 21 ஆம் நூற்றாண்டின் நவீன அடிமைகளான உரிமைகள் பறிக்கப்பட்ட தொழிலாளர்களை உற்பத்திசெய்கின்றனர். புதிய உலக ஒழுங்கின் தெற்காசிய கர்த்தாக்களான இத்தொழிமுறைக் கொலையாளிகள் நவீன அடிமைகளைப் பேணுவதற்காக மதவெறியர்களாகவும் தேசியப் பற்றாளர்களாகவும் பேரினவாதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக்கொள்வர்.