Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவம் சர்வதேசக் கூலிப்படையாக…

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மாலைதீவில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறீ லங்கா இராணுவத்தினரும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தை சர்வதேச நாடுகளில் கூலிப்படைகளாகப் பயன்படுத்த ரொபேர்ட் பிளேக் இனப்படுகொலையின் சூத்திரதாரியான கோதாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியிருந்தமை அறியப்பட்டதே. போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் மனிதவிரோத மிருகத்தன்மையுடைய நடவடிக்கைகள் உலகின் மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகளை எச்சரிக்கும் அதே வேளை அமரிக்கா போன்ற யுத்த நாடுகளைக் கவர்ந்திருக்கிறது. இலங்கையில் இராணுவத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இராணுவத்தினரின் வெளி நாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக $750 வரை ஊதியமாக வழங்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இவர்கள் ஏகாதிபத்திய நாடுகளால் கொலை காரர்களாகப் பயன்படுத்தப்படுகின்றனரா என்ற அச்சம் பரவாலாகத் எழுந்துள்ளது.
இதே வேளை, சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு என்ன நடந்தது என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை என்பது ம் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version