எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அவர்கள் குறித்த நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானுக்கு செல்லும் படைவீரர்கள் ஆயுதங்கள் மற்றும் படை வாகனங்கள் சகிதம் அனுப்பப்பபடவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையினராக செல்வோருக்கு மாதம் ஒன்றுக்கு 1100 அமெரிக்க டொலர்கள் வரையில் செலுத்தப்படுகின்றன.
இலங்கைப்படையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்காக இலங்கை படைவீரர்கள் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவம் ஆப்கானிதானுக்கும் கூலிப்படைகளாக அனுப்பிவைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.