இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது என தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் எப்ராயிம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற நெருக்கடி நிலைக்குக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இலங்கையின் இராணுவத்தின் நடத்தைகள் தொடர்பாக ஜெனிவா உடன்படிக்கைக்கு அமைய சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, உடனடியான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் தென்னாபிரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என தென்னாபிரிக்க அரசாங்கம், இலங்கை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதியமைச்சர் எப்ராயிம் குறிப்பிட்டுள்ளார்.