
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று கூறியதும் பொது மக்கள் படுகொலை செய்யப்படுவதை தொடர்ச்சியாக நிராகரித்ததும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செய்மதி ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளது. 06.05.2009 அன்றும் 10.05.2009 பதிவு செய்யப்பட்ட இரு வேறு ஒளிப்படங்களை ஒப்பு நோக்கும் போது பின்னதாகப் பதியப்பட்ட படத்தில் குண்டுகள் துளைக்கப்ட்ட நிலப் பகுதிகளையும், எரிவடைந்த தற்காலிக கூடாரங்களையும் காணக்கூடியதாக உள்ளது.
மக்கள் குடியிருப்புக்கள் மீதும், மருத்துவ மனை மீதும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தொடர்ச்சியாக நிராகரித்துவந்த இலங்கை அரசிற்கு ஆதர பூர்வமான இவ்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸைத் தளமாகக் கொண்ட வானொலியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வைத்தியக் கலாநிதி வி,சண்முகராஜா செய்தி நிறுவனக்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தற்காலிக மருத்துவமனை மூன்றாம் தடவையாக ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், 15 இற்க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.