Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவத்தால் சூறையாடப்படும் தமிழ்ப் பகுதிகளின் இயற்கை வளம்

வவுனியா,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விலையுயர்ந்த மரங்கள் இராணுவத்தினரால் சூறையாடப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் பகுதியில் வீடமைப்புத் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் நிறுவனத்திற்காக தமிழ்ப் பகுதிகளிலிருந்து இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டு தெற்கு நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. மக்கள் குடியிருக்கும் வீடுகளிலிருந்தே இவ்வாறான மரங்கள் வெட்டப்படுகின்றன. பாரிய அளவில் நடைபெறும் இந்தச் சூறையாடலில் தமிழ் முகவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடருமானால் வடகிழக்கில் பருவகாலமழை வீழ்ச்சி அருகிப்போவதற்கான அபாயம் காணப்படும் என்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வவுனியா பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version