இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புது டில்லியில் நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர் இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரம் அடையும்போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாக குறிப்பிட்டார். எனவே, இந்தியாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக உள்ளது என இந்திய பிரதமர் குறிப்பிட்டார். இந்திய அயல்நாடுகளான பாக்கிஸ்தான், பங்களாதே, நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளை பேணிவருகின்றது. எனினும், இதன்போது தமது தேசிய வாதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா அவதானமாக இருந்து வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதேவேளை, அயல்நாடுகள் தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது. ஏனெனில், குறித்த நாடுகளின் பிரச்சினை இறுதியில் இந்தியாவின் பிரச்சினையாக மாறுவதாக இந்திய பிரதம மந்திரி சுட்டிக்காட்டினார்.