Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இனப்படுகொலை- மேற்குலக அதிகாரசக்திகள் போதியளவு ஆர்வம் காட்டியிருக்கவில்லை: நோம் சொம்ஸ்கி

இனப்படுகொலை அல்லது ஏனைய போர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு (Responsibility to Protect)(R2p) தொடர்பான விவாதம் முதற்தடவையாக ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றதைத் தொடர்ந்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, மாநாட்டில் கலந்துகொண்ட கல்விமான்கள் குழுவில் இடம்பெற்றிருந்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த நோம்  சொம்ஸ்கி ,இலங்கையில் இடம்பெற்றவை கொடூரமானது என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பதற்கான பொறுப்பு (R2p) கோட்பாடு இலங்கைக்கு பிரயோகிக்கப்பட்டிருக்கவேண்டுமா ? அல்லது அதனை இந்த வருடம் இலங்கைக்கு அமுல்படுத்தியிருக்க வேண்டுமா என்பது தொடர்பாக நீங்கள் சிந்தித்தீர்களா? என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “இல்லை’ என்று பதிலளித்த சொம்ஸ்கி அங்கு (இலங்கையில்) இடம்பெற்றதை “கொடூரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நியூயோர்க்கிலுள்ள இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில் தெரிவித்திருப்பதாவது;

மேற்குலக அதிகாரசக்திகள் போதியளவு ஆர்வம் காட்டியிருக்கவில்லை என்று அவர் (சொம்ஸ்கி) தெரிவித்துள்ளார். “ஏதோவென்று நடை பெற்றிருந்தபோதும்’ மேற்குலகு ஆர்வம் காட்டவில்லை.அவர் ருவாண்டா இனப்படுகொலைகள் குறித்து விபரித்தார்.

ஜூலை 23 இல் (வியாழன்) பதவியிலிருந்து வெளியேறும் பிரிட்டிஷ் அமைச்சர் மல்லோ பிரவுணிடம் இலங்கையின் சர்வதேச நாணய நிதியக்கடன் விண்ணப்பம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று அவர் கூறினார்.

யாராவது பேசுவார்களா? என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரைக்கேட்டது.எனக்குத் தெரியாது என்று மல்லோ பிரவுண் கூறினார்.

பிரிட்டன் பேசுவதற்கு திட்டமிட்டிருந்தால் அங்கீகாரம் வழங்குவது உயர்மட்டத்தில் என்று தென்படுவது குறித்து அவர் அறிந்திருக்கக் கூடும் என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

சொம்ஸ்கி மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.பிரிட்டன் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.காஸா பள்ளத்தாக்கிற்கு அப்பால் இயற்கை வாயு தொடர்பாக பிரிட்டனுடனான இஸ்ரேலின் நடவடிக்கைகளில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரொனி பிளயர் சம்பந்தப்பட்டிருந்தது பற்றி குறிப்பிட்டார். இலங்கையின் வடகடலில் எண்ணெய் வாயு என்பன கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சிறியளவில் அறிக்கைகள் வெளிவந்ததை இது ஞாபகப்படுத்துவதாக உள்ளது.இராணுவ நடவடிக்கை தொடர்பாக சிலர் விபரிப்பதாக இது உள்ளதா? காலம் பதில்சொல்லும் என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

Exit mobile version