Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இனப்படுகொலையும் ருவாண்டா இனப்படுகொலையும் புலம்பெயர் உளவாளிகளும்

rwandaஇலங்கையைப் போன்றே ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ரூட்சி இன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை அந்த நாட்டின் ஜனாதிபதி ஹப்யாரிமானாவின் படுகொலைக்குப் பின்னர் உச்சத்தை எட்டியது. ஜனாதிபதி பயணம் செய்த விமானம் சுட்டுவிழுத்தப்பட்டது. இன்று கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விமானத்தைச் சுட்டுவிழுத்தியதில் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கும் அடங்கியுள்ளது என்றும் அதன் பின்னர் இனப்படுகொலையைத் தூண்டிவிடுவதிலும் அமெரிக்க அரசு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

மத்திய ஆபிரிக்கப் பகுதிகளை பிரன்ஸ் நாடு தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. இனப்படுகொலையைத் தூண்டியதனூடாக அமெரிக்க அரசு பிராஞ்சு அரசை மீறி தனது ஆதிக்கத்தை ருவாண்டாவில் நிலைநாட்டிக்கொண்டது. பிரன்ஸ் அரசு தனது நலன்களின் அடிப்படையில் ருவாண்டா அரசை ஆதரித்தது. இனப்படுகொலை அரசை ஆதரித்ததனூடாக மத்திய ஆபிரிக்காவில் பிரான்சின் நம்பகத் தன்மை கேள்விக்குள்ளானது. பிரஞ்சு மொழி பேசிய மத்திய ஆபிரிக்க நாடுகள் இன்று ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக பேசும் நிலைக்கும் அமெரிக்காவே இந்த நாடுகளின் மேய்ப்பர்கள் ஆகும் நிலைக்கும் இனப்படுகொலையை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது.

புலம்பெயர்ந்து வாழ்ந்த ரூட்சி இன மக்களின் உதவியுடன் ருவாண்டாவின் வியாபாரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆங்கிலம் பேசும் கிறீஸ்தவர்களின் கைகளிற்கு மாறியது. இராணுவ மயப்படுத்தப்பட்ட ருவாண்டாவும் மத்திய ஆபிரிக்க நாடுகளும் வறுமை தாண்டவமாடும் அமெரிக்க அரசின் கடனாளி நாடுகளாக மாறியுள்ளன. பிரஞ்ச் அதிகாரம் அங்கிருந்து அகற்றப்பட்டு அமெரிக்கா அரசின் கட்டுப்பாட்டினுள் பிரான்சின் பல்தேசிய நிறுவனங்கள் வந்தடைந்தன.

ருவாண்டாவில் முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் இடையேயான மோதல்களைப் பயன்படுத்தி அதனை மத்திய ஆபிரிக்கா முழுவதும் பரவலாக்கிய அமெரிக்க அரசு ருவாண்டாவை அதற்கான தளமாகப் பயன்படுத்தியது.

உகண்டாவின் ஊடாக ரூட்சி ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்க அரசு இனக்குழுக்கள் இடையேயான மோதலை வலுப்படுத்தியது. இது இனக்குழு மோதல் தீவிரமடையக் காரணமானது.

ருவாண்டாவில் அந்த நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் அணிதிரட்டிப் போராடும் அரசியல் தலைமை தோன்றியிருக்குமானால் இன்று மத்திய ஆபிரிக்கா வறுமையில் மடிந்துகொண்டிருந்திருக்காது.

இங்கு புலம்பெயர் ரூட்சி இனத்தின் அதிகார வர்க்கத்தினர் அமெரிக்காவின் உளவாளிகள் போன்றும், அடியாட்கள் போன்றும் செயற்பட்டே முழு ஆபிரிக்க நாட்டையும் இராணுவ மயப்படுத்தி மயானமாக்கியுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் அமெரிக்க அரசும் அதன் உலக அமைப்புக்களான ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்றனவும் செயற்பட்டன. யுத்ததின் பின்னர் அமெரிக்க அரசின் அடியாட்களான புலம்பெயர் தலைமைகளும் பண முதலைகளும் தமிழர்களின் அரசியலைக் கையகப்படுத்தியுள்ளன. இவர்களின் ஊடாக சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தை அழிக்கும் அமெரிக்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ மயப்படுத்த தேசிய இன முரண்பாட்டைப் பயன்படுத்துகிறது. இப் புலம்பெயர் உளவாளிகளை அரசியல் நீக்கம் செய்வதும், அழிவிலிருந்து மக்களையும் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் பாதுகாப்பதும் இன்றைய அவசரத் தேவையாகும்.

Exit mobile version