இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பாரரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசிய அரசியல் கட்சிகளின் உலக மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பா.ஜனதா சார்பில் தமிழக பொறுப்பாளரான முரளி தரராவ், வெளிநாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய்ஜாலி ஆகியோர் பங்கேற்றனர். இதற்காக இருவரும் இலங்கை புறப்பட்டு சென்றுவிட்டனர். மகிந்த ராஜபக்சவின் உயிர் ஐ.நாவினதும் அமெரிக்காவினதும் தூக்குக்கயிற்றில் ஊசலாடுகிறது என்றும் மக்களைப் போராட வேண்டாம் என்றும் புலம்பெயர் மற்றும் இந்திய பிழைப்புவாதிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இனக்கொலை அரசு உலகமயமாகிவருகிறது. மோடி அரசின் தமிழக ஆதரவாளர் வை.கோபாலசாமி என்ற ஈழப் பிழைப்புவாதி இவைதொடர்பாக கருத்தின்றி உறக்கத்திலிருக்கிறார்.ஆசியாவின் வளர்ச்சி குறித்து இந்த மாநாட்டில் விவாதிப்போம் என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரையில் கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் நடைபெறவுள்ளது.இந்த மாநாடில் மஹிந்த ராஜபக்ஸ பிரதம உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாற்பது நாடுகளைச் சேர்ந்த 360 கட்சிகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.