Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை – இந்தியா – கருணாநிதி முக்கூட்டு : இலங்கை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்

மன்மோகன் சிங் இலங்கை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர், கருணாநிதி – இந்திய மத்திய அரசு – இலங்கை அரசு ஆகியவற்றிற்கிடையேயான கூட்டை மறுபடி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அந்த நெருக்கமான நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாராயின் அவரை நாங்கள் வரவேற்போம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது தமிழகத்தின் 21 எம்.பி. க்களுக்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை நிலைவரத்தை நேரில் கண்டறிந்து ஆய்வு செய்வதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவுள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறித்து அரசாங்கம் சார்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Exit mobile version