Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் அமரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம்!

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்தும் நோக்கில் அமரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாக பென்டகன் தளபதி அட்மிரல் ரொபேர்ட் வில்லார்ட் தெரிவித்துள்ளார். செத்துக்கொண்டிருக்கும் அமரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாத யுத்தங்களையும் இன மனிதப் படுகொலைகளையும் நடத்திவருகிறது. தனது மனிதப்படுகொலைகளை ஜனநாயகம். மனிதாபிமானம் என்ற பெயரில் நியாயப்படுத்தியும் வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3 மில்லியன் உயிர்களைப் பலிகோண்டிருக்கும் உலகின் பேட்டை ரவுடியான அமரிக்கா உலகின் ஒவ்வோர் சந்திலும் தனது நேரடி ஆக்கிரமிப்பிற்குத் தயாராகிவிட்டதையும், மூன்றாவது உலக யுத்த அழிப்பிற்குத் தயாராவதையும் இந்தத அறிவிப்பு ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் விரும்பும் அதற்காகப் போராடும் உலக மக்களுக்கு உணர்த்தி நிற்கிறது.
இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே தனது நேரடி ஆக்கிரமிப்பிற்கு ஊடாக மனிதப்படுகொலைகளை நடத்திவந்த அமரிக்கப் பயங்கரவாத அரசு இப்ப்போது தெற்காசியாவிலும் அதனை ஆரம்பித்துள்ளது. தெற்காசியாவில் அதிகமாக அக்கறை செலுத்திவரும் அமரிக்கப் பயங்கரவாத அடியாட்களில் ஒருவரான ரோபேர் ஓ பிளேக் விடுதலைப் புலிகளை அல் கயீதாவுடன் ஒப்பீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவத்துடனான தமது இராணுவ ஒத்துழைப்பு இருதரப்பு ஒத்துழைப்பு எனக் குறிப்பிட்ட பென்டகன் தளபதி, இருதரப்புப் பயிற்சி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என விரிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இந்தியாவுடன் மிக நெருக்கமாகசெயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய அரசு தளம் அமைத்துக்கொடுத்துள்ளது. இன்று அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி உலகில் ஜனநாயகம் விரும்பும் மக்கள் போராடுவது உடனடித் தேவை என்ற சூழல் உருவாகிவிட்டது.

உலகில்  தேசியவிடுதலைப் போராட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் அழித்து மனித இரத்தத்தால் தன்னைக் குளிப்பாட்டிக்கொண்ட அமரிக்கப் பயங்கரவாத இராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா போன்ற நாடுகளில் பெரிய அளவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version