Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இந்தியா உட்பட ஏழு நாடுகளுக்கு அமரிக்கா சலுகை

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு சலுகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளது.ஈரானிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவை கணிசமாக குறைத்ததன் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியா, தென் ஆபிரிக்கா, தாய்வான் உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு சலுகைஅளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.180 நாட்களுக்கு குறித்த நாடுகள் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களுக்காக எவ்வித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான எரிபொருள் தேவையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவே மத்திய கிழக்கில் அமரிக்கா இனப்படுகொலை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version