Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இந்தியக் கூட்டுச் சதியின் பின்னணியில் தொடரும் கைதுகள்

arrestsஇந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தெய்வீகன் மீண்டும் போராட வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருந்தார். அவரைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுத்துறையும், சில புலம்பெயர் அரச அடிவருடிகளும், இலங்கை பாசிச அரசும் இணைந்து உருவாக்கிய சதித் திட்டத்தின் அடிப்படையில் ஏபிரல் மாத முற்பகுதியில் கோபி, அப்பன் தெய்வீகன் ஆகிய மூவரும் இலங்கை அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகிவிட்டனர் எனப் பிரச்சாரம் மேற்கொள்ளவும், உலக அளவில் இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறது என மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கவும், போராட்ட உணர்வுள்ளவர்களை அழிக்கவும் இச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

தெய்வீகன் உட்பட மற்றும் இருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டனர். இலங்கை இந்திய அரசுகளின் புலம்பெயர் அரச அடிவருடிகள் இணைந்து மேற்கொண்ட இக்கொலையின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர்.

புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(27)தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி தொடக்கம் இதுவரையான காலத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 47 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண   கூறினார்.

அதில் 6 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைதான 77 பேரில் 47 பேர் மீதே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மீதம் உள்ள நபர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இது குறித்து மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம், புலம்பெயர் அமைப்புக்கள் போன்ற அனைத்தும் மௌனம் சாதிப்ப்பது குறிப்பிடத்தக்கத்து.

கோபி,தேவியான்,அப்பன் படுகொலை : இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி!
Exit mobile version