Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஆசியாக் கண்டத்தின் அதிசயம் : டக்ளஸ்

இலங்கையில் பல ஆயிரக் கணக்கானோர் முகாம்களில் அடைத்து வைக்கப்படுச் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கிழக்கு இலங்கையில் நிலவும் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது. அரசாங்கம் போரில் அழித்த வீடுகளை மீளமைப்பதற்குப் பணம் இல்லை என்று கைவிரிக்கிறது. இலங்கை நாலாம் மண்டல நாடாக தாழ்ந்து செல்கிறது. இந்த நிலையில் அரச துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவா இலங்கை பணக்கார நாடு என்று சொல்கிறார்.

2004ம் ஆண்டு இலங்கையின் தனிநபர் தலா தேசிய வருமானம் 1062 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாகவும், 2009ம் ஆண்டு தலா தேசிய வருமானம் 2053 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய கண்டத்தின் அதிசயமாக இலங்கையை இந்த அரசாங்கம் மாற்றியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானம் இல்லாத அபிவிருத்தியோ அல்லது அபிவிருத்தி இல்லா சமாதானமோ நீடிக்காது என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version