Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரச பாசிசம் தெற்கிலும் தெருவிற்கு வருகிறது?

பாரத லக்ஷ்மன் பிரமச்சந்திரவில் படுகொலையைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்களுள் பதற்றம் நிலவுவதாகத் தெரிய வருகின்றது. இன்று பிரபல பாதாளக் உலக அமைச்சரான மேர்வின் டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். நாமல் ராஜபக்சவிற்கும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளுக்கும் இடையிலான காதல் விவகாரமே கொலைக்கு அடிப்படைக் காரணம் என சில தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரத லக்ஷ்மனின் மரணச் சடங்கில் பெரும் எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரதவும் நிழல் உலகத்துடன் தொடர்புடையவர் என்பதால் மோதல்கள் தொடர வாய்புள்ளதாககவும் சிறீலங்கா சுதந்திரக கட்சி வட்டாரங்களுக்குள் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version