இலங்கை அரச பயங்கரவாதிகளின் இத்திட்டத்தின் அடிப்படையில் இன்று இராணுவத் தலைமையகம் அமைப்பதற்காக மக்களின் நிலங்கள் பறிக்கப்படும் என அரசு உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளது.
வவுனியா பேயாடி கூழாங்குளத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின் 20 ஏக்கர் காணியே 56 வது இராணுவப் படைப்பிரிவின் தலைமையக அமைவிற்காக சுவீகரிப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிமிர்த்தம் வவுனியா பிரதேச செயலகப் பிரிவின் நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பேயாடிகுழாங்குளம் கிராம வடபகுதியான கொக்குவெளி நிலம், கிழக்குப் பகுதியான பேயாடிக்குளம் அணைக்கட்டு, தெற்குப் பகுதியான இராமசாமி இராமச்சந்திரன் நிலம், மற்றும் மேற்குப் பகுதியான ஏ9 பிரதான வீதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலமே அபகரிக்கப்பட்டுள்ளது.