தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பை நடத்திவரும் மகிந்த அதிகாரம் தமிழ்ப் பேசும் மக்களை தமது வாழ்விடங்களிலிருந்து “சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது”. அதிகாரபீடத்திலிருக்கும் குற்றவாளிகளின் வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகள் வரை நீட்சியடைந்துள்ளது. இணையத் தளங்கள், தன்னார்வக் குழுக்கள் என்று இலங்கை அரசு உட்பட்ட சர்வதேச உளவு நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் இயங்குகின்றன. இலங்கையில் நிகழும் இரத்தப் பெருக்கை நியாயப்படுத்தவும், மக்களின் எதிர்ப்பை நிர்மூலமாக்கவும் இவை மிகவும் கீழ்த்தரமான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றன. தேனீ என்ற புலம்பெயர் இணையத்தளம் இதைக் கன கச்சிதமாகவே நிறைவேற்றுகிறது. இனப்படுகொலை நிகழ்த்தும் இலங்கை இந்திய அர்சுகளின் ஊதுகுழலாகச் செயற்படும் இந்த இணையம் மக்களின் அழிவுகளிலிருந்து அகதி அந்தஸ்துப் பெற்றுக்கொண்டவர்களால் நடத்தப்படுகிறது, இன்று நாளாந்த மரணச்செய்தியை சுமந்து செய்திகளாக வரும் இலங்கை அகதிகளுக்கு எதிராகவே பிரச்சாரம் செய்கின்றது.
இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்ல பெருந்தொகை பணம் கிடைத்தது எவ்வாறு? விசாரணைக்கு இன்டர்போலின் உதவியை நாடும் றோ ………….என்ற செய்தி தட்ஸ் தமிழ என்ற இணையத்தில் இருந்து எடுத்து அரசு சார்பு லேக் கவுஸ் பத்திரிகைகளை விஞ்சிய தேனி என்ற இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இருந்து முப்பது வருடங்களுக்கு முன் சொகுசு வாழ்க்கைக்காக அகதியாக வந்த
வன்னி மக்கள் மத்திரம் தானா பத்து இலட்டசம் பணம் செலுத்தி தப்பியோட முயற்சிப்பவர்கள்? அவர்களது சொத்துக்கள் அழிந்த நிலையில் இவர்கள் எவ்வாறு பணம் செலுத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதிலை இவர்கள் அச் செய்தியின் கீழ் எழுதியிருந்தால் அது பத்திரிகா தர்மம் ஆகும். அப்படி என்றால் மற்றைய வெளிநாடு வந்த அகதிகள் சொத்துக்களை விற்றா வெளிநாடு வந்தார்கள்?
அரச பாசிசத்தின் கோரக்கரங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் அழுகுரல்களும், அவல ஓலங்களும், அனாதரவான கூக்குரல்களும் தட்ஸ்தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவது செய்திகளாகச் செத்துக் கிடக்கின்றன. இவையெல்லாம் தேனீ என்ற இலங்கை அரசின் ஊது குழலுக்குத் தென்படுவதில்லை. மனிதம் மரணித்துப் போவது தேனீ போன்ற நிர்வாண ஊதுகுழல்களின் முற்றங்களில் தானோ?