அதிகாரவர்க்கமும் உலகின் கொலைகாரர்களும் தமது எதிரிகளைத் தாமே உருவாக்கிக்கொள்ளும் அபாயத்தை சாமானிய மக்களும் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். அண்மையில் லைக்கா மொபைல் என்ற பல்தேசிய நிறுவனம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு நிதிவழங்கியது குறித்தும் ராஜபக்ச குடும்பத்தோடு அவர்களுக்குள்ள தொடர்பு பற்றியும் இனியொரு இணையமும், கோப்ரட்வாச் என்ற இணையமும் அவற்றைத் தொடர்ந்து பல தமிழ் ஆங்கில இணையங்களும் அம்பலப்படுத்தியிருந்தன.
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
Tory Donor Lycamobile’s Links To Sri Lankan President Rajapaksa’s Family Sparks Outrage
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
இச் சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொண்ட பிரித்தானியத் தொழிற்கட்சி டேவிட் கமரனுக்கு இது குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியது. லைக்கா மொபைல் இற்கு இலங்கை அரசாங்கத்துடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த தான் உத்தரவிடுவதாக டேவிட் கமரன் தாமதமின்றித் தெரிவித்தார். தற்காலிகமாகப் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக டேவிட் கமரன் இவ்வாறு கூறியதை லைக்கா மட்டுமல்ல மக்களும் புரிந்துகொண்டனர்.
இவற்றை மையமாக வைத்து லைக்கா – கமரன் – ராஜபக்ச நாடகத்தை மேலதிக தகவல்களோடு இனியொரு இணையம் அம்பலப்படுத்தியிருந்தது.
இதில் எதனையும் கண்டுகொள்ளாத லைக்காவின் பணத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அதிர்வு என்ற இணையம் லைக்காவை புனிதப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும் உதவிகளையும் வழங்கிய டேவிட் கமரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய நாடகம் அனைவரும் அறிந்ததே.
டேவிட் கமரன் யாழ்ப்பாணம் செல்ல அழுத்தம் கொடுத்தது லைக்கா மொபைல் தான் என்றும் ராஜபக்ச குடும்பத்தோடு உறவுகளைப் பேணும் லைக்கா தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும் அதிர்வு இணையம் பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதிர்வு இணையத்தின் மேல் மூலையில் லைக்காவின் விளம்பரம் தொங்கிக்கொண்டிருந்தது.
பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடிகொடி எல்லாவற்றையுமே சேர்த்து சோற்றுக்குள் புதைக்க முயன்ற அதிர்வு இணையத்தின் செய்தியை லைக்காவும் இலங்கை அரச ஆதரவு இணையங்களும் பயன்ப்படுத்திக்கொண்டன.
தமிழ் இனவாதத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் அதிர்வைப் போன்றே சிங்களப் பேரினவாதத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் இலங்கை அரச ஆதரவு செய்தித் தளங்கள் லைக்காவே டேவிட் கமரனுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அதானல் புலம் பெயர் தமிழர்களின் அழுத்தமே டேவிட் கமரன் யாழ்ப்பாணம் செல்லக் காரணம் என்று செய்திகளை வெளியிட்டன. ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிரிஸ்மஸ் செய்தியா வெளிவந்த இச்செய்திகள் அனைத்திலும் அதிர்வு இணையம் ஆதரமாகப் பயன்படுத்தப்பட்டது.
Tamil Diaspora links to David Cameron exposed
இப்போது புலம் பெயர் தமிழர்களை ஆதாரமாகக்கொண்டியங்கும் லைக்காவின் வியாபாரம் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆக, லைக்கா இலங்கை அரசின் விமானத் துறையோடு நடத்தும் வியாபாரமும், புலம் பெயர் நாடுகளில் நடத்தும் தொலைபேசி வியாபாரமும் பாதுக்காக்கப்பட்டுள்ளது. தவிர, டேவிட் கமரனின் ஆதரவோடு நடைபெறும் வரிகட்டாமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதன் மறுபக்கத்தில் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவோடு இனப்படுகொலை அரசும் அதன் ஆதரவாளர்களும் பாதுக்காப்பட்டுள்ளனர்.
தேசியத்தின் பெயரால் தமிழ் இனவாதிகள் நடத்தும் அருவருப்பான வியாபாரத்தின் உடனடிக் குறியீடாக அதிர்வு இணையம் திகழ்கிறது.
அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் நேரடி எதிரிகள் இலங்கை அரசும் பேரினவாதிகளும் என்றால் அந்தப் பேரினவாதத்தைத் தீனி போட்டு வளர்க்கும் இனவாதிகள் மறைமுக எதிரிகள்.
இவற்றை அதிவு இணையமும் இலங்கை அரசும் திட்டமிட்டுச் செய்கின்றனவா அன்றி தற்செயலானதா என்பது தெளிவில்லை. எது எவ்வாறாயினும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்திற்கு மக்களின் அவலம் விற்பனை செய்யபடுகிறது என்பது மட்டும் தெளிவானது.
தொடர்பான அனைத்துச் செய்திகளும்:
முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.u
http://www.dailynews.lk/local/