Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரச அமைச்சரின் ‘100 முள்ளிவாய்க்கால்’ எச்சரிக்கையும் நிலப்பறிப்பும்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கந்து கொண்ட மக்கள் மீது அரச படைகளும் துணைக் குழுக்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. 100 முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கு எச்சரிக்கவிடுத்த மறு நாளே அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே வேளை டக்ளஸ் தேவானந்தா போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த இனவெறியின் பெயரால் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுவது போன்றே இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் வேவ்வேறு வடிவங்களில் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
உலகம் முழுவதும் நடத்தப்படும் நிலப்பறிப்புக்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். . இதற்கு எதிரான உலகரீதியான மக்களின் இணைவு இன்று அவசியமாகிறது.
இதே வேளை முன்னை நாள் தமிழக முதல்வரும் முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு தார்மீக ஆதாவை வழங்கியவருமான முத்துவேல் கருணாநிதி நிலப்பறிப்பிற்கு எதிரான அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளார். மத்திய இந்தியாவில் சாரிசாரியாக மக்கள் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது ஆதர்வளித்த கருணாநிதிக்கு இலங்கையில் பௌத்த பேரினவாதிகளால் நடத்தப்படும் நிலப்பறிப்பிற்கு எதிராகப் பேச எந்த உரிமையும் கிடையாது.

Exit mobile version