இலங்கை அரசைப் பாராட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியம்
இனியொரு...
1980 ஆம் ஆண்டில் தெற்காசிய கொலைகார நாடான இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு அங்கு பகிரங்க முகாம்களை நிறுவி இந்திய உளவுத்துறையின் இராணுவப் பயிற்சியும் பெற்றுக்கொண்ட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் சாம்பல் கூட எஞ்சாமல் அழிக்கப்பட்டன. இந்தியாவைப் பயன்படுத்துகிறோம் என்று கூறியவர்கள் முகவரி கூடத் தெரியாமல் துடைத்தெறியப்பட்டார்கள். இன்று அதை விட அதிகமாக மேற்கு நாடுகளை நம்பக் கோருன்ற அரசியல் அனாதைகள் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரின் வாக்குமூலத்தைக் கேட்கவேண்டும். பயங்கரவாத அரசான இலங்கை அரசை ஜனநாயக அரசு என்று பெருமிதம் கொள்கிறார்.
இலங்கையை தோல்வியடைந்த நாடு (Failed country) ஒன்று பிரித்தானியா ஒருபோதும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின்.
இந்நாட்டில் வெற்றிகரமான பொருளாதாரம் காணப்படுகின்றது, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆட்சியில் உள்ளார் என்றும் தூதுவர் தெரிவித்து உள்ளார்.