ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் அண்மையில் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு பிரதிபலிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அல்லது சிரேஸ்ட அதிகாரிகளினால் மட்டுமே உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினாமா செய்த கோர்டன் வைஸ் வெளியிட்ட கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடாக கருதப்பட முடியாது எனவும், அவை தனிப்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் சேத விபரங்கள் தொடர்பில் நம்பகமானத் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும், அதனால் அவை குறித்து உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட முடியாது எனவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.