Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசைக் கண்டித்துப் போராடிய நெடுமாறன், வைகோ ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் கைது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நேற்று சென்னை மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழமையாக இம்மாதிரி போராட்டங்களில் கலந்து கொள்கிறவர்களை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது வழக்கமாகும் ஆனால் கருணாநிதியின் உத்தரவுப்படியே ஜாமீனில் வெளிவர முடியாத 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I) பிரிவுகளில் கைது செய்யப்பட்டதோடு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சிறையில் அடைத்துள்ளனர். சென்னை புழல் சிறையில் அடைத்தால் விரைவில் வெளிவந்து விடுவார்கள் என்பதாலும் தொடர்புகள் பேணப்படக் கூடாது என்பதாலும் வைகோவை திருச்சி சிறையிலும், நெடுமாறனை கடலூர் சிறையிலும் , ராஜேந்திரனை மதுரை சிறையிலும் தனித் தனியாக அடைத்துள்ளது. ஆனால் இவர்கள் வழக்கு விசாரணைக்காக இந்த ஊர்களில் இருந்தே அழைத்து வரப்படுவார்கள்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தீவீர ஈழ ஆதர்வாளர்களை நிரந்தரமாக சிறையில் வைக்க கருணாநிதி அரசு முயர்ச்சித்து வருவது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version