Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசு, EPDP : முரண்பாடு வலுக்கிறது!

ஈ.பி.டி.பி  மற்றும் ரி.எம்.வி.பி  பிள்ளையான்  குழுவினருக்குமிடையிலான  முரண்பாடுகள் வலுவடையும்  வேளையில் அரசாங்கம் பிள்ளையான்  சார்பான நிலையெடுதுள்ளதாக கொழும்புசார் சிங்கள் அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை, கடந்த மாதம் 19ம் திகதி கடத்தப்பட்ட சுரேஸ்குமாரின் உடல் அண்மையில் செங்கலடி ஈ.பி.டி.பி காரியாலய வளவில் சடலமாக மீட்கப்பட்டது. குறித்த நபரைக் கடத்திச் செல்வதற்குப் பயன்டுத்திய வெள்ளை வான் செங்கலடிப் பிரதேச ஈ.பி.டி.பி. காரியாலய பொறுப்பாளர் ரவி என்பவரது மனைவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 56-5659 என்ற இலக்கமுடைய வெள்ளை வானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், கப்பம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ஒருவரது மோட்டார் சைக்கிலும் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சுரேஸ் குமார் படுகொலை விவகாரம் தொடர்பாக 9 சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 20ம் திகதி வரை சுமார் 180 பேர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ராதகிருஸ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெள்ளை வான் விவகாரம் பற்றி தாம் இதுவரையில் அறியவில்லை எனவும், அவ்வாறான தகவல்கள் இருந்தால் தமக்கு அறிவிக்குமாறும் புதிய காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன அண்மையில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version