Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திவரும் பிரதேச ஆக்கிரமிப்பு : இந்திய அரசின் துணையோடு?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அரசினால் 50 ஆயிரம் வீடுகளில் கட்டிக் கொடுக்கும் பணி முற்றுப் பெறாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் சுமார் 9 ஆயிரம் வீடு கட்டும் பணி முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை மட்டும் யாழ்.அரியாலைப் பகுதியில் நாட்டி வைத்த இந்திய அரசு தற்போது 30 வீடுகள் மட்டுமே முழுமையாக பூர்த்தியடைந்துள்ளது.

யாழில் பூர்த்தி செய்யப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தை திறந்து வைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ண எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்துதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா 27.11.2010 – சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிப் பகுதியில் நடைபெற்றது.

அரியாலைப் பகுதியில் 50 வீடுகள் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா தலைமையிலான குழுவினர் நாட்டி வைத்திருந்தனர்.

ஒரு வருடங்களாகியுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் 9 ஆயிரம் வீடுகளில் இந்திய அரசு 30 வீடுகளை மட்டும் இது வரை கட்டிமுடித்துள்ளதாக இந்திய வீட்டத்திட்ட கட்டிட ஒப்பந்தகாரர் ரி. கார்த்திக் தெரிவித்தார்.

இதேவேளை தென்பகுதி சிங்கள மக்களுக்கு 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கணிசமான வீடுகள் சிங்கள மக்களுக்கு கட்டிக் கொடுப்பதற்கு வடமாகாண ஆளுநர் சந்திர சிறி நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திவரும் பிரதேச ஆக்கிரமிப்பு,நிலப்பறிப்பு போன்றநடவடிக்கைகளுக்கு இந்த்திய அரசு துணைபோகிறதா என்ற சந்தேகம் இதனூடாக வெளிப்படுகிறது.

Exit mobile version