இந்தியா, சீனா, கியுபா,எகிப்து உட்பட 47 நாடுகள் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கை அரசை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஏனைய நாடுகள் தலையிடுவது இலங்கை அரச விருப்பத்தைப் பொறுத்தே அமைய வேண்டும் என்றும் இந்தியா உட்பட 26 நாடுகள் விருப்புத் தெரிவித்ததற்கிணங்க இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமை அமைப்புக்களையும், உதவி அமைப்புக்களையும் அனுமதிப்பது தொடர்பாக இலங்கை அரசு தேவைப்பட்டால் அனுமதி வழங்கலாம் எனவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியாதெனவும் இந்த நாடுகளின் பெரும்பான்மை வாக்குகளுக்கிணங்க தீர்மானிக்கப்பட்டது.