
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவையில் பேசிய இராபர்ட் பிளேக், “தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக பன்னாட்டு போர்க்குற்ற தீர்ப்பாயத்தை சிறிலங்க அரசு எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது. சிறிலங்க அரசு மீது பன்னாட்டு விசாரணை திணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்
இதன் தொடர்ச்சியாக சர்வதேசத் தரத்திற்கு ஏற்றவாறு இலங்கை அரசு தனது யுத்தக்குறங்களைத் தானே விசாரணை செய்யத்தவறும் நிலையில் அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் தெர்வித்தார்.
பின்னதாக, தாம் இலங்கை அரசு யுததக் குற்றங்களை இலங்கை அரசே விசாரணை செய்வதையே தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமரிக்க அரசின் இரட்டை நிலைப்பாட்டையே இது குறிப்பதாகவுள்ளது.
ஆசிய மக்கள் மத்தியில் அமரிக்க அரசிற்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் இவ்வாறன இரட்டை நிலை சொல்லாடல்கள் மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கான தற்காலிகக் கருவிகளாகப் பயன்படுகின்றன.