Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவோம் : ஐ.நா

untamilsசர்வதேச உரிமைப் பிரகடங்களில் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ளதால் தாம் அவர்களுடன் இணக்க அடிப்படையில் வெலை செய்யப்போவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி சபினே நன்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தினத்திற்கான நிகழ்விலேயே இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பரிந்துரைகள் அமுலாக்கப்ப்பட வேண்டும் எனவும் அதற்கு முழுமையான ஆதரவு வழங்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளைப் போன்று ஐ.நாவின் தலையீடு தனது முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

மக்கள் கொந்தளிக்கும் போது அவர்களது உணர்வுகளை உள்வாங்கி போராட்டங்களைச் சிதைப்பதற்காகவும் அது ஒடுக்கப்பட்ட் நிலையில் அரசுகளுக்கு ஆதரவாகவும் செயற்படுவதே ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட்ட ஏனைய ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடாக அமைந்துள்ளது.
பொதுவாக இலங்கை அரசு மேற்கு ஏகபோகங்களின் அடிமையாகிவிட்ட நிலையிலும் போராட்டங்களை ஒடுக்கப்பட்டு சமரசத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது மறுபக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

Exit mobile version