Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசுக்கு எதிராக கச்சத்தீவு செல்லும் போராட்டம் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு.

சுமார் முப்பதாண்டுகால பிரச்சனை இது. க்டந்த முப்பதாண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை இராணுவமும் கடற்படையும் சுட்டுக் கொன்றிருக்கிறது. பல நேரங்களில் இராமேஸ்வரம் பகுதியில் கரையிரங்கியும் மக்களைத் தாக்கி இருக்கிறது. புலிகளுக்கு உதவுகிறார்கள். ஈழப் போராட்டத்தின் வலுவான முதுகெலும்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இலங்கை அரசின் குற்றச்சாட்டு. இப்போது போர் முடிந்து விட்டது. புலிகளும் இல்லை என்கிற நிலையில் இனி எக்காலத்திலும் இலங்கையில் போராளிக்குழுக்கள் உருவாகி விடக் கூடாது என்கிற நீண்டகால நோக்கில் தமிழக மீனவர்களையும் அச்சுறுத்தி தண்டிக்க வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கை அரசு இந்திய அரசோடு சேர்ந்து இராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக மீனவத் தலைவர்களில் ஒரு சிலரை விலைக்கு வாங்கி யாழ்பாணத்தைச் சார்ந்த சூர்யகுமாரன் என்னும் இலங்கை அரசு ஆதரவாளரை தமிழகத்திற்கு அனுப்பி பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தை நடத்தி “கடைடியில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் உங்களை இலங்கை கடற்படை தாக்குகிறது” என்று பழியை தமிழக மீனவர்கள் மீதே போட்டு விட்டுச் சென்றனர். இதற்கு சில தமிழக மீனவர் தலைவர்களும் கேரளாவைச் சார்ந்த தன்னார்வக்குழுவினரும் உடந்தை. இந்நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதல் நின்றபாடில்லை என்கிற நிலையில் தமிழக மீனவர்களிடையே இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு தரப்பினர் மீதும் ஆழமான சந்தேகங்கள் வலுப்பெற்றன. பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் இதில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு எதிராக போராட நேற்று ராமேசுவரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கொண்டனர்.இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டித் தர வேண்டும்; எல்லை தாண்டி சென்ற 110 படகுகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்; இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகள் வருகிற 8-ந் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி, அக்டோபர் 11-ந் தேதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றும் தாக்குதல்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து மீன்களை பறித்து கடலில் வீசியும், வளைகளை அறுத்தும் தாக்கியுள்ளனர்.இதனிடையே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்து, வரும் 8ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக ராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version