ராஜபக்ச குடும்பமும் இலங்கையின் பேரினவாதிகளும் வன்னியில் நிகழ்த்திய இன அழிப்பை வெறும் போர்க்குற்றம் என்ற
ஏகாதிபத்தியங்களால் கையாளப்பட்ட போராட்டம் தொல்வியடைந்தது என்ற உணமையை மறைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட தலைமைகள் அமரிக்கா ராஜபக்சவை தூக்கில் போடப்போகிறது என்று வரைக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருந்த நிலையில் அமரிக்கா மேற்கொள்ளவிருக்கும் தீர்மானத்தின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நிறைவேற்றிய அதே தீர்மானங்களையே மீண்டும் ஒப்புவிப்பதக அமரிக்கா அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கத் தயார் என்ற செய்தியையும் வழங்கியுள்ளது.
மில்லியன் கணக்கில் மக்களின் பணத்தைச் செலவிட்டு புலம்பெயர் தலைமைகள் மேற்கொண்ட அமரிக்க ஆதரவுப் பிரச்சாரங்களும் ஜெனீவா பயணங்களும் அர்த்தமிழந்த ஆர்ப்பாட்டங்களும் இதுவரை தோவியடந்த வழிமுறைகளையே மீண்டும் முன்னிறுத்தியது. அழிக்கும் நாடுகளை நம்பி எஞ்சியவர்களைக் காட்டிக்கொடுக்குடும் அரசியலைத் துறந்து ஒடுக்கப்படும் உலக மக்களோடு இணைந்து போராடும் அரசியல் திட்டம் ஒன்றை வகுத்துக்கொள்ள வேண்டிய நேரமிது.
தலைகீழாக மாறிய அமரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம் கீழே:
1) ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.
2) போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கைத் தீவின் அனைத்துப் பிரஜைகளிற்கும் நீதி, சமத்துவம், மீளிணக்கம், பொறுப்பாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான சுயாதீன நடைமுறையை ஏற்படுத்துதல்
3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரின் சுயாதீனச் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களிற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டுதல், சுதந்திரமாக கருத்துக்கூறல், தனிநபர்களின் ஒன்றுகூடுதலிற்கான உரிமை, நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், விசாரணையற்ற கொலைகள், சிறுபான்மையினரின் விவகாரங்கள், காணமற் போதல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்தல்
4) மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பாக விடயங்களில் சிறீலங்காவிற்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குதல்.
5) மேற்கண்ட விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையகம் சமர்ப்பித்தல்.
ஆகியனவே அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானமாகும்.