Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசின் லொபி அரசியல் : பிபிசி பண்டாரவும் வலையில்

புரட்சிகர அரசியல் மக்களை அணிதிரட்டுவது குறித்த உறுதியான அரசியல் திட்டங்களைக் கொண்டிருக்கும். இதற்கு எதிரான மாபியா பாணியிலான அரசியல் திட்டமிட்டு உலகம் முழுவதும் முன்நகர்த்தப்படுகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இதன் பாத்திரம் பிரதான பங்கை வகித்து அழிவுகளுக்கு வித்திட்டது. பண முதலைகளையும் வியாபாரிகளையும், மாபியா தொடர்பாடல்களையும் தோற்றுவித்த லொபி அரசியலை போருக்குப் பின்னர் கையகப்படுத்தியிருப்பது இலங்கை அரசு. பிரித்தானியாவிலிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக பல அரசியல் பிரமுகர்களுக்கு பணம் மற்றும் ஏனைய வளங்கள் தாரைவார்த்துக் கொடுத்தது இலங்கை அரசு.
இதே போன்று ராஜபக்ச அரசின் பாசிச செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக இலங்கை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் வட்டியிலாக் கடனை பிபிசி ஊடகவியலாளர்கள் இருவருக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வந்துள்ளது.
இலங்கை அரசின் இந்த வட்டியில்லாத கடனைப் பெற்றுக்கொள்வதற்கு பிபிசி இன் சர்வதேச சேவை ஊடகவியலாளரான எல்மோ பர்ணாண்டோவும் சிங்கள சேவையின் நீண்டகால ஊடகவியலாளருமான சந்திரகீர்த்தி பண்டாரவும் விண்ணப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே பிபிசி சிங்கள சேவை ரனில் விக்கிரமசிங்காவின் ஊடக மாநாட்டில் பேசப்பட்டவையைத் திரித்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Exit mobile version