Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)

இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை.
போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் அதிகார வர்க்கம் சார்ந்த மனித உரிமை அமைப்புக்கள் எந்த காத்திரமான நடவடிக்கைக்கும் தயாராக இல்லை. இலங்கையில் நடைபெற்றது போன்று உரிமைக்காகப் போராடும் பெரும்மான்மையான உலகமக்கள் இவ்வாறு கொல்லப்படலாம். இந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அதிகாரவர்க்கத்திற்கு ஒரு முன்னுதாரணம். ராஜபக்ச ஆட்சி தண்டனை பெறாமல் பாதுகாப்பதன் பின்னணி இதுதான்.
ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு குறைந்த பட்சம் அழுத்தங்களையாவது பிரயோகிக்க இவ்வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் இதனைப் பொதுத்தளத்தில் முன்வைக்கிறோம்.
[flv:https://inioru.com/ava/wc.flv 480 368]

Exit mobile version