Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

dhayaஉலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில் எஞ்சியவர்களை பாசிசத்தின் உதிரி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வார்கள். இன்று டக்கள்ஸ் தேவானந்தா கட்சிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வரைக்கும் இலங்கை அரசின் துணைக்குழுவாகச் செயற்பட்டுவந்த ஈ.பி.டி.பி குழுவினரை மகிந்த பாசிஸ்டுக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.

வட மாகாண தேர்தலில் டக்ளசுடன் கூட்டுச்சேரும் மகிந்தவின் சுதந்திரக் கட்சி டக்ளசிற்கு அரவாசிக்கும் குறைவான தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது. டக்ளஸ் இற்கு வேறு வழியின்றி இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. புலிகள் அழிக்கப்பட்டவுடன் டக்ளசுடன் 360 பாகையில் பல்டி அடித்து இணைந்துகொண்ட சில உறுப்பினர்கள் இப்போது மகிந்தவைச் சந்திக்கக் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

வடக்கில் இதுவரை டக்கள்சின் உறுப்பினர்களை துணை இராணுவப்படையாகப் பயன்படுத்திவந்த இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறீ ரெலோ என்ற கிரிமினல் அமைப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தது.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இலங்கை அரசின் ஏற்பாட்டின் அடிப்படையில் சிறீ ரெலோ அமைப்பிற்கு ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் அழிப்பில் ஈடுபடுவதற்கான பங்குபிரிப்பு நடைபெற்றது. அதன் போது எடுக்கப்பட்ட நிழல் படத்தில் டக்ளசின் இடது புறத்தில் சிறீ ரெலோ தலைவர் உதயனும் மறுபுறத்தில் பருதி கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள சயந்தனும் காணப்படுகின்றனர்.

வடக்கில் புதிதாக உருவாகியுள்ள சாதிச் சங்கங்கள், சிங்கள போலி இடதுசாரிகள் என்ற இன்னோரன்ன அமைப்புக்களை களத்தில் இறக்கும் மகிந்த பாசிஸ்டுக்கள், கே.பி இன் ஆதரவு பெற்ற முன்னை நாள் புலி உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக்கியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போகிற போக்கில் இலங்கை அரசின் அடுத்த இரத்தப் பசிக்கு டக்ளஸைப் பலியாக்கிவிட்டு புலிகள் மீண்டும் வந்துவிட்டதக இன்னொரு அழிப்பை இலங்கை நடத்தினாலும் வியப்படைவதற்கில்லை.

Exit mobile version