அமரிக்கா சென்றுள்ள சரத் பொன்சேகா அமரிக்க அரச அதிகாரிகளால் பல தரப்பு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதே வேளை அடிப்படை வாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமைய மற்றும் ஜே.வீ.பீ போன்றன வெளிப்படையாக அமரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கோதாபாய ரஜபக்சவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அது குறித்த விசாரணையே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
அமரிக்காவிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப் போவதாகவும் பொன்சேகாவிடம் பேசுவது இலங்கை அரசாங்கமாக மட்டுமே அமைய முடியும் என பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தனது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் அமரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்தையும் மேற்கொள்வோம் என ஜேவீபீ சார்பில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இல்ங்கை அரச வட்டாரங்களில் பெரும் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை அமரிக்காவின் இந்த நடவடிகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இலங்கை அரசு பீ.பீ.சீ செய்தி அமைப்பிற்குத் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் மற்றொரு செய்தியில் அமரிக்காவை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தனது மகளைச் சந்திக்கச் சென்ற சரத் பொன்சேகாவை விசாரிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.