Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கை வர நேர்ந்தது:ஏ.எவ்.பி. செய்தி

மோதல்களின் நடுவே சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பாதுகாக்குமாறும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்கள் காரணமாகவே இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் இலங்கை வர நேர்ந்ததாக ஏ.எவ்.பி. செய்தி கூறுகின்றது.

இதனிடையே;இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் நேற்றுக்காலை ஜனாதிபதியை சந்தித்து பேசியபோதுவன்னி பகுதியிலிருந்து சிவிலியன்களை பாதுகாப்பாக மீட்டமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் இந்தியா வழங்கும் உதவிகளுக்கு இலங்கை நன்றிகளை தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் குறிப்பிட்டன.

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மோதல்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டதாக கூறும் ஐ.நா. ஆவணம் ஒன்று கசிந்துள்ள வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Exit mobile version