மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிபுணர்களின் அறிக்கையை கொண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களை கண்டறியவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் இதனை விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்திநிறுவனமான இன்னர் சிட்டி பிரஸிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் குறித்து ஆராய இலங்கை அரசாங்கம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மார்க் டோனர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழு நல்ல ஆரம்பமாகும்.
எனினும் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என மார்க் டோனர் குறிப்பிட்டுள்ளார்.