Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

pothupAlasenaஇலங்கை அரசின் நாஸிக் கும்பலான பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று இரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பெப்பிலியன என்னும்மிடத்தில் அமைந்துள்ள பாஷன் பக் என்னும் கடையைத் தாக்கிய அழித்துள்ளது. பல கிளைகளைக் கொண்டுள்ள இக்கடையின் பெப்பிலியன கிளை, அதன் விற்பனைப்பொருள் சேமிப்பு மையமாகவும் திகழ்ந்துவந்தது. பௌத்த துறவிகள் சிலரால் தலைமை தாங்கப்பட்ட குழு ஒன்றே இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலீசிற்கு அறிவிக்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள் அங்கு சென்றனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த தாக்குதலை பொலிஸ் வேடிக்கைபார்த்தப்படி நின்றிருந்தது.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றதும் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யாமல் கொள்ளைப் பொருட்களுடன் அனுப்பிவைத்தனர்.
சம்பவத்தைப் புகைப்படம் பிடித்த இரண்டு ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இலங்கை அரசை அமரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைப் பிடித்து தூக்கில் போடவேண்டும் என்று கூறி மக்களின் அவலங்கள் மீது அரசியல் நடத்தும் தமிழ் இனவாதிகள் இத் தாக்குதல்களைக் குறைந்தபட்சம் கண்டிக்ககூட இல்லை.

Exit mobile version