Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த எலைன் சந்தர்ருக்கு இந்திய உயர்ஸ்தானிகரகம் விசா மறுப்பு!

zzpa1 இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சிப்பவரும், அமெரிக்க மனிதாபிமான பணியாளருமான கலாநிதி எலைன் சந்தர், இந்தியாவுக்கு செல்ல அமெரிக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், விசா வழங்க மறுத்துள்ளதாக டிரகன் கொனிகல் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் இவர் உரையாற்றவிருந்ததாகவும் மேலும் 15 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருந்த உள்ளூர் தமிழ்ச் சங்க கூட்டத்திலும் பங்கேற்கவிருந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.

புதுடில்லியில் நடைபெறவிருந்த கூட்டத்தில் அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வைகோ சகிதம் பங்கேற்கவிருந்தார். இந்தநிலையில் இவரின் விசா மறுக்கப்பட்டமையை, சென்னையை மையமாகக் கொண்ட அரசியல் பிரமுகர் நடராஜன் கண்டித்துள்ளார்.

சந்தர், இலங்கையில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமது சொந்த மக்களையே முகாம்களில் இலங்கை அரசாங்கம் தடுத்துவைத்துள்ளதாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version