இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமை உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஏனைய நாடுகளின் ஆதரவுடன் மீண்டும் எழுப்பப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை கேள்வி எழுப்புவோம். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பிலாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை நிகழ்ந்த்த வேளை போரை நிறுத்துவோம், படுகொலையின் பின்னர் போர்க்குற்றத்திற்குத் தண்டிப்போம், முள்வேலிக்குப் பின் அகதிகள் நின்ற போது மனிதாபிமான் உதவி செய்வோம், இன்று அழுத்தம் வழங்குவோம் இப்படிக் கூறும் பிரித்தானிய அரசு மக்களை அழிப்பதற்கு ஆயுதங்கள் வழங்கிய அரசுகளில் ஒன்று. இன்று முழு இலங்கையையும் சூறையாட பிரித்தானிய நிறுவனங்கள் அணிவகுத்துள்ளன.